Any Free Downloads........


இயற்கை நிறத்தை வர்ணமாக மாற்றும் கருவி(படங்கள் இணைப்பு)

16/05/2011 04:21

இயற்கையில் நாம் காண்பவற்றில் உள்ள வண்ணங்களை எதுவித மாற்றமுமின்றி உண்மையான நிறத்தை எம் சித்திரங்களுக்கு தீட்ட முடிந்தால் எப்படியிருக்கும்! இப்படி கற்பனை செய்பவை எல்லாம் உண்மையில் நடக்கக்கூடிய சாத்தியமே இருக்காது என எண்ணியிருப்போம்.

ஆனால் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி கற்பனையை நிஜத்தில் காணக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சான்றாக ஒரு பேனை உள்ளது. இந்தப் பேனை கலர் பிக்கர் என அழைக்கப்படுகிறது. இந்த பேனையின் விசேட அம்சம் என்னவென்றால் நாம் தேர்வு செய்து காட்டும் நிறத்தை பேனை உள்வாங்கி எடுக்கும்.

உதாரணமாக பச்சை இலையின் அருகில் இந்த பேனையை வைத்து ஸ்கேன் பட்டனை அழுத்தினால் அதன் நிறத்தை அப்படியே எடுத்துக் கொள்ளும். நிறம் பேனையின் திரையில் காட்டும். அதன்பின் பேனையில் நாம் எடுத்த நிறத்தைக் கொண்டு வரையலாம் எழுதலாம். இந்தப் பேனையை வடிவமைத்த பெருமை ஜின்சன் பார்க்கைச் சேரும். இனி எமக்குத் தேவையான நிறங்களை வேறு எங்கும் தேடித் திரியும் தேவை ஏற்படாது அல்லவா?

—————

Back