Any Free Downloads........


தரையில் கால்பட்டால் மரணம் என பெண்ணுக்கு 75 நாள் கட்டிலில் சிறை

16/05/2011 21:39

போலீசில் புகார் தராமல் செய்வதற்காக, தரையில் கால்பட்டால் மரணம் என மிரட்டி பெண்ணை 75 நாள் கட்டிலில் இருந்து இறங்க விடாமல் செய்தோம்’ என ரூ.1 கோடி மோசடி செய்த போலி ஜோதிடர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(62). மனைவி ரேணுகாதேவி(50). இருவரும் பிஎஸ்என்எல் அலுவலர்கள். பொள்ளாச்சி ஜோதிநகரில் வசிக்கின்றனர்.

சிறுமுகை இடுகம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன்(35). போலி ஜோதிடரான இவரும், கீதா, அவரது கணவர் நாச்சிமுத்து மூவரும் சேர்ந்து, முத்துகிருஷ்ணன், ரேணுகா தம்பதியிடம், ‘கிரக அமைப்பு சரியில்லை. குடும்பத்தில் மரணம் நிகழும்’ என மிரட்டி 147 பவுன் நகை, ரூ.92 லட்சத்தை பறித்துள்ளனர்.
புகாரின்படி, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் முருகேசன் உட்பட மூவரையும் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். 112 பவுன் நகை, ரூ.30 லட்சத்தை மீட்டனர் போலீசில் முருகேசன் அளித்த வாக்குமூலம்:

நான் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். ஜோதிடம் எதுவும் தெரியாது. குறி சொன்னேன். சிலருக்கு நான் சொன்னது நடந்தது. அதன்பின், பலரும் ஜோதிடம் பார்க்க வந்தனர். ரேணுகாதேவியிடம் பரிகார பூஜை பற்றி சொன்னபோது, பூஜையில் வைக்க ஸீ2 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகளை தந்தார். அவர் வசதியானவர் என்பது தெரியவே பலமுறை நகை, பணம் கேட்டோம்.

ரேணுகாதேவிக்கு மிஸ்டுகால் விட்டால் அவர் போன் செய்வார். பார்க்க வரவேண்டும் என்றால் உடனே கார் அனுப்பி வைப்பார்கள். கணவனும், மனைவியும் கைகட்டிக்கொண்டு பவ்யமாகத்தான் எங்களிடம் பேசுவார்கள். அவர்களை எங்களின் கைப்பாவையாக வைத்திருந்தோம்.

ஒரு கட்டத்தில் குட்டு வெளிப்பட்டு விடுமோ என சந்தேகித்தோம். இதனால் ரேணுகாதேவியை வெளியில் வரவிடாமல் செய்ய முடிவு செய்து, ‘இன்னும் 75 நாளுக்கு கிரகநிலை மோசமாக உள்ளது. தரையில் கால் பட்டால் மறுகணமே மரணம்தான். கட்டிலை விட்டு இறங்கக் கூடாது‘ என்றேன். அதன்படி ரேணுகாதேவி 75 நாட்கள் கட்டிலிலேயே முடங்கி கிடந்தார்.

ஒரு கட்டத்தில் ரேணுகாதேவி பணம் இல்லை என்றார். கத்தியை காட்டி மிரட்டினேன். சூட்கேசில் இருந்த ஸீ5 லட்சம் மற்றும் 10 பவுன் நகையை கொடுத்தார். இனி எங்களிடம் வீடு மட்டும்தான் உள்ளது என்றார். வீட்டை விற்க சொன்னேன். வீடு வேண்டுமா, உயிர் வேண்டுமா என முடிவு செய்து கொள்ளுங்கள் என மிரட்டினேன். பின் போலீசில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு முருகேசன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

—————

Back