Any Free Downloads........


மணிரத்னம் படத்தில் சட்டையை கழற்றும் விஜய்

16/05/2011 21:53

வித்தியாசமா நடிக்கல, வித்தியாசமா நடிக்கல என்று விஜய் மீது விமர்சனத்தை குவித்து வந்தவர்கள், இனி அந்த விமர்சனங்களை ஓனிக்ஸ் வண்டியில் ஏற்ற ரெடியாகலாம்.

மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் புது அவதாரம் எடுக்கவுள்ளார் விஜய். ஆர்யா, சத்யராஜூடன் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும் நடிக்கவுள்ள பொன்னியின் செல்வனில் விஜய்தான் பொன்னியின் செல்வனாம். இது வரலாற்று கதை என்பதால் படம் முழுவதும் விஜய் சட்டை அணியாமல் வித்தியாசமான தோற்றத்தில்தான் நடிக்கப்போகிறாராம்.

மகாபாரத கருவை சுட்டு தளபதியையும் ராமாயண கதையை சுட்டு ராவணனையும் உருவாக்கிய மணிரத்னம் இந்த முறை கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை கையிலெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

—————

Back